Type Here to Get Search Results !

மக்களுடன்‌ முதல்வர்‌ திட்டம் - மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்.


அரசின்‌ சேவைகள்‌ மக்களுக்கு விரைந்து சென்றுசேர "மக்களுடன்‌ முதல்வர்‌"(மூன்றாம்‌ கட்டம்‌) திட்டம்‌ முதல்வரின்‌ முகவரித்துறை மூலம்‌ நகர பகுதி மற்றும்‌ ஊரக பகுதிகளில்‌ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து குக்கிராமங்களில்‌ வசிக்கும்‌ மக்களின்‌ கோரிக்கை மனுக்களை அவர்களின்‌ இருப்பிடத்திலேயே பெற்று தீர்வு காணமக்களுடன்‌ முதல்வர்‌” (மூன்றாம்‌ கட்டம்‌) திட்டத்தினை குக்கிராமங்களில்‌ செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ ஆணையிடப்பட்டு தருமபுரி மாவட்டம்‌ பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்‌ 2025-ஜனவரி 21 மற்றும்‌ 22 அன்று "மக்களுடன்‌ முதல்வர்‌" "(மூன்றாம்‌ கட்டம்‌) முகாம்‌ கீழ்‌ கண்டுள்ள இடங்களில்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ள பஞ்சாயத்துகள்‌ அதற்கு எதிரே குறிப்பிட்டுள்ள. முகாம்‌ நடைபெறும்‌ இடத்திற்கு வருகை புரிந்து மணு அளிக்கலாம்‌.

                   

மேற்படி முகாமில்‌ கிராமபுற மக்களுக்கு அவசியமான கீழே குறிப்பட்டுள்ள 15 அரசு துறைகள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ 44 வகையான சேவைகள்‌ தொடர்பாக பெறப்படும்‌ மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள்‌ முடிவுகாணவும்‌, இ-சேவை மையங்களில்‌ மீள விண்ணப்பிக்கப்படும்‌ மக்களுடன்‌ முதல்வர்‌ முகாம்‌ மனுக்களுக்கு 50 சதவீதம்‌ கட்டண சலுவை வழங்கவும்‌, தெரிவிக்கப்பட்டுள்ளதால்‌ அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள்‌ தங்கள்‌ கோரிக்கை மனுக்களை இம்முகாம்களில்‌ வழங்கி விரைந்து தீர்வுகாண கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அரசு துறைகள்‌ விவரம்‌:

  1. ஆதி திராவிடர்‌ (ம) பழங்குடியினர்‌ நலத்துறை
  2. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்‌டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை
  3. கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர்‌ பாதுகாப்பு துறை
  4. எரிசக்தித்துறை                                :
  5. உள்‌, மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
  6. தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை
  7. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌, துறை
  8. வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை
  9. ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை
  10. சமூக நலம்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை
  11. மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை
  12. மருத்துவம்‌ - மக்கள்‌ நல்வாழ்வுத்துறை 
  13. வேளாண்மை - உழவர்‌ நலத்‌ துறை
  14. கால்நடை பராமரிப்பு, பால்வளம்‌, மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை
  15. வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற வளர்ச்சித்‌ துறை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies