பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாள் விழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 டிசம்பர், 2024

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாள் விழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் 61வது பிறந்த நாள் விழா நகர செயலாளர் ஞானம் தலைமையில் நடைபெற்றது. சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் மசிவுல்லா, விவசாய அணி சண்முகம், அவைத்தலைவர் எக்பால், லட்சுமணன், மாரியப்பன்,பெலதை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேருந்து நிலையம் முன்பு உள்ள அமமுக கட்சி கொடி ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்த நிகழ்ச்சியில் நகர இணை செயலாளர் மகேந்திரன், துரைசாமி, நவாஸ்கான், கவுசி, நயாஸ்கான், குமார், சுபான், வடிவேல், ரங்கநாதன், கன்னியப்பன், எல்லப்பன், நாகராஜ மற்றும் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad