தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமக தொண்டர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளையேட்டி பென்னாகரம் தொகுதி பாமக சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் பாமக கட்சியினர் ஒன்றிணைந்து பொதுமக்கள் 300 பேருக்கு பிரியாணி மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கி கொண்டாடினர். இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 86வது பிறந்தநாள் விழா 300 பேருக்கு பிரியாணி வழங்கிய கொண்டாட்டம்.
ஜூலை 25, 2024
0
Tags

