Type Here to Get Search Results !

பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ரூ.6.11 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (29.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பள்ளி ஊராட்சியில் (MGSMT) முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.89.58 இலட்சம் மதிப்பீட்டில் காடுசெட்டிபட்டி முதல் காரகூர் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், கரகூர் முதல் செங்காடு வரை ரூ.61.05 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலைகளையும், பஞ்சப்பள்ளி ஊராட்சி சுரகுரிக்கை கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும், செல்போன் டவர் அமைப்பது குறித்தும், நபார்டு (NABARD) 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் கேசர்குளி அல்லா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகளையும், கும்மனூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பையும், என மொத்தம் ரூ.6.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும், குறிபிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட  ஜம்பூத் மலைக்கிராம பொதுமக்களிடம் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இந்த ஆய்வின்போது, பாலக்கோடு வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்  திரு.சுருளிநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies