தருமபுரி நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள விவசாயி. சோகத்தூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி இளங்கோ (56) என்பவரே தருமபுரி நகர காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார், குழந்தைகள் வளர்ப்பது போல தனது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை பாசமுடன் வளர்த்து வந்தததாகவும், இந்த நிலையில் இன்று காலை வாயில் ரத்தம் கக்கியபடி மூன்று நாய்கள் அடுத்தடுத்து துடிதுடித்தபடி பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இதனை தொடர்ந்து அடுத்து நான்கு நாய்கள் வாயில் ரத்தம் கக்கியவாறு ஆங்காங்கே சுருண்டு விழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்ற நாய்கள் எங்கே சென்றது என்ன ஆனது என்று தெரியவில்லை என்று தெரிவித்திருக்கும் விவசாயி இளங்கோ, தனது வீட்டருகே ஓட்டல் கடை நடத்தி வரும் நபர் மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் அவர் மீது தருமபுரி நகர காவல்நிலையத்தில் புகாரளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார், நாய்கள் உயிரிழந்திருப்பதால் இளங்கோவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்துள்ளனர்.