Type Here to Get Search Results !

தாட்கோ மூலமாக பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன்.


தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படவுள்ளது.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானயித்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படவுள்ளது.


காலி இடம் அல்லது கட்டடம் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ. 2 லட்சம் முற்றிலும் விலக்கு அளிக்கப்படும்.


மேலும், விற்பனை செய்வதற்காக வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனம் மூலம் அளிக்கப்படும். மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். தொழிலைச் செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்.


எனவே, 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்வர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.20,000/- முதல் ரூ.30,000/- வரை இலாபம் பெறலாம். ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு திட்டத்தொகையில் 30% அல்லது அதிகபட்சமாக ரூ.2,25,000/- வரை மானியமும் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்வர்களுக்கு திட்டத்தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.3,75,000/- வரை மானியம் பெறலாம்.


மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies