Type Here to Get Search Results !

கூத்தாண்ட அள்ளியில் தனிநபர் வீட்டு வாசலில் கல்வி பயின்று வரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள்; கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறக்கபடாததால் பெற்றோர்கள் வேதனை.



தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த கூத்தாண்ட அள்ளி கிராமத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வந்த நிலையில்  பள்ளி கட்டிடங்கள் முழுவதும் பழுதடைந்ததால் அதை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. 


தற்காலிகமாக தனிநபர் வீட்டு வாசலில் அமர்ந்து 2ஆசிரியர்கள், 45 மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3  மாதங்கள் கடந்த பின்பும் இதுவரை புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை  என அரசு அதிகாரிகள் மீது  பெற்றோர்கள்  குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த தனிநபர் வீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்றும்,கல்வி கற்க ஏற்ற சூழல் இல்லை என்றும் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அடிப்படை வசதிகளோ பாதுகாப்புகளோ இல்லாத இந்த இடத்தில்  மாணவர்கள் படித்து வருவதாகவும், உடனடியாக புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க வேண்டும் எனவும், அதே போன்று பள்ளிக்கு செல்லும் வழி சேறும் சகதியுமாக உள்ளதாகவும், இதில் மாணவர்கள் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும், மேலும் இதில் தேங்கும்நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ காரணமாக உள்ளதாகவும், இதனையும் சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies