இக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் பிரேம்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கிமைக்கு தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவித்தார். சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் சிறப்புரை ஆற்றி மூன்று மாணவ மாணவிகளுக்கு ஆறு மாதத்திற்கான கட்டணத்தை 32 ஆயிரம் ரூபாய் சீட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் காசோலையாக வழங்கினார்.
காமதேனு சேரிட்டிஸ் பானு நிவேதிதா அவர்கள் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் முருகேசன் பத்திரிக்கை ஆசிரியர், மலரும் உள்ளாட்சி, மாத இதழ், இயக்குனர், கிறிஸ்ட் இந்தியா பவுண்டேஷன், அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் மாணவர்களின் தனித் திறமையை எடுத்துரைக்கும் விதமாக ஆடிட்டர். திரு. ஆதித்யா சேலம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். காமதேனு சேரிட்டிஸ் நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்கள் சமூக வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு என்ற கருத்து குறித்து சிறப்புரை வழங்கி நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் விஜயா பாய் காமதேனு சாடிஸ்ட் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பிரேம்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெ. பிரகாஷ் V4U-நிறுவனத் தலைவர் மற்றும் NDSO மாவட்ட ஒருங்கிணைப்பாளர்அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேதியல் துறை தலைவர் பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள் நன்றி கூறினார்.

