தருமபுரி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தர்மபுரி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, இப்போட்டியில் ஜூனியர் பிரிவை சார்ந்த 7 சரகத்தில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர் இப்போட்டியில் அருர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர் வெற்றிபெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வித்துறை பழனிதுரை, முருகேசன், சங்கர் வெங்கடாசலம் ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பள்ளிதலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

