Type Here to Get Search Results !

ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுவதை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழல் விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி இன்று (30.10.2023) ஏற்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழியான நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.


நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே, நான் 

  • அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்,
  • இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்,
  • அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், 
  • பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும்,
  • தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும்,
  • ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

என்ற உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.நசீர் இக்பால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், வருவாய் வட்டாட்சியர்கள் உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies