Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்ட சிறுபான்மையினர் இனத்தவர்களுக்கு டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்.


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

 

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

 

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம்  பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது


மேலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை தொழிற்கல்வி/ தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்டசமாக திட்டம்1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3 சதவீதம் வட்டி விகித்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர;களுக்கு 8 சதவீதம் மாணவியர;களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

 

எனவே, தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும்  (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பராசீக மற்றும் ஜெயின்) ஆகிய சிறுபான்மையினர் இனத்தவர்க்கு டாம்கோ  மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான தனி நபர் கடன் திட்டம் மற்றும்  சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்  தருமபுரி மாவட்டத்தில் கீழ்க்கண்ட நாட்களில்  நடைபெற உள்ளது. சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

. எண்

வட்டம்

நாள்

கிழமை

நேரம்

லோன் மேளா நடைபெறும்

இடம்

1

தருமபுரி நகர கிளை

07.08.2023

திங்கள்

 

மாலை 4.00 மணி

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தருமபுரி நகர கிளை

2

பொம்மிடி

09.08.2023

புதன்

மாலை 4.00 மணி

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பொம்மிடி

 

3

நல்லம்பள்ளி

14.08.2023

புதன்

 

மாலை 4.00 மணி

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நல்லம்பள்ளி கிளை,
சேலம் மெயின் ரோடு, நல்லம்பள்ளி

4

பென்னாகரம்

16.08.2023

 

புதன்

 

மாலை 4.00 மணி

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பென்னாகரம் கிளை,

பேருந்து நிலையம் அருகில்,  பென்னாகரம்

5

பாலக்கோடு

நகர கிளை

19.08.2023

சனி

 

மாலை 4.00 மணி

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பாலக்கோடு நகர கிளை,

சரவணா தியேட்டர் அருகில், பாலக்கோடு

 

6

காரிமங்கலம்

21.08.2023

திங்கள்

மாலை 4.00 மணி  

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, காரிமங்கலம் கிளை, பாலக்கோடு ரோடு, காரிமங்கலம்

7

பாப்பிரெட்டிப்பட்டி                                                               

23.08.2023

புதன்;

 

மாலை 4.00 மணி  

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பாப்பிரெட்டிப்பட்டி கிளை,

ரங்கம்மா பேட்டை, பாப்பிரெட்டிப்பட்டி

8

அரூர்                                                    

28.08.2023

திங்கள்

 

மாலை 4.00 மணி  

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அரூர்,

 

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்/திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர;பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் ( Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர;பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எனவே, இத்திட்டத்;தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தருமபுரி  மாவட்ட ஆட்சியா; அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளை  அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம், என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884