தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் காட்டம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி இனிப்புக்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊர் கவுண்டர் சின்னசாமி, மந்திரி கவுண்டர் பெரியசாமி, கோல் கவுண்டர் மணோகர், திமுக ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் தங்கவேல், பள்ளி மேலாண்மை குழு தலைவி புஷ்பா, உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் பெஞ்சமின் நன்றியுரை ஆற்றினார்.