தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருந்து நிலையத்தில் 2022-23 க்கான இயக்கம் மற்றும் பாராமரிப்பு திட்டத்தின் கீழ் 47 இலட்சத்து 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தில் 6 புதிய கடைகள் கட்ட தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள், நிதி ஒதுக்கீடு செய்தார், அதனை தொடர்ந்து பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று பேருந்து நிலைய கடைகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரடியாக ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார் .
மேலும் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு சென்றவர், கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை விண்ணப்பங்கள் குறித்து கேட்டறிந்து விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு பணியினை விரைவாக முடித்திட பேரூராட்சி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை பொறியாளர் முருகன், கவுன்சிலர்கள் முனிராஜ், வெங்கடேசன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.