தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வாழைத்தோட்டம் அருகே சென்ற மாதம் அரசு பேருந்து மோதி 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உறவினர்கள் யாரும் இவரின் உடலை பெற வரவில்லை, எனவே பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முருகன், காவலர் திருநாவுக்கரசு, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தமிழ்செல்வன், சதீஸ் குமார் ராஜா ஆகியோர் மூதாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 60 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)

