Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் தச்சு தொழிலாளர்கள் சார்பில் மே தினவிழாவில் இனிப்பு வழங்கி வெகு விமர்சியாக கொண்டாட்டம்


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தச்சு தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் மே தினவிழா சங்க தலைவர் ராஜா தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் காவல் ஆய்வாளர் தவமணி கலந்து கொண்டனர். 


மேலும் மே 1-ம் தேதியான இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, இந்த நாட்டுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் மேன்மையை உலகறிந்த நாளாகவும், அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்த நாளில் கல்லுடைக்கும் தொழிலாளி முதல் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை செங்குருதியை வியர்வையாக்கி, உழைப்பையே மூச்சாக சுவாசித்து, தேசத்தின் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்கும் தொழிலாளர்கள் என்று சிறப்பு உரையாற்றினர். 


இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் முருகன், செயலாளர் சரவணன், கிருஷ்ணன், ராஜா, ஆறுமுகம், குமார், மகேந்திரன், சீனிவாசன், சாமிநாதன் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies