Type Here to Get Search Results !

தொப்பூர் சுங்கச்சாவடி அருகே தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் கருப்பு பேட்ச் அணிந்து அறவழி போராட்டம்.


தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்  பேரமைப்பினர் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே தங்கள் வாகனங்களில் கருப்புக் கொடி கட்டியும், ஓட்டுநர்கள் கருப்பு பேட்ச் அணிந்தும் அறவழி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்  மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலு, மாவட்ட பொருளாளர் பூபதி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இந்தப் போராட்டத்தில், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓட்டுநர்களுக்கு தபால் ஓட்டு உரிமை வழங்க வேண்டும். அதனைத் தொகை கட்டவில்லை என்று முன்னறிவிப்பின்றி வெளிமாநிலங்களில் லோடுடன் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் பல சட்டங்களை இயற்றி இந்தியா முழுவதும் ஓ ஓட்டுநர்களை தாக்கி திருடும்  கொள்ளை கும்பல் மீது உடனடியாக வடக்கு பதிவு செய்து கொண்ட சட்டத்தில் அடைக்க வேண்டும். 

இந்தியாவின் எந்த மாநிலத்தில் விபத்து ஏற்பட்டாலும் ஓட்டுநர்களுக்கும் வாகனத்திற்கும் முழு பாதுகாப்பை அந்த அந்த மாநில அரசுகள் உடனடியாக காவல்துறை உதவியுடன் செய்து கொடுக்க வேண்டும். பொதுவாக விபத்து நடக்கும்போது கனரக வாகனங்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே விபத்து நடக்கும் நிகழ்வில் எந்த வாகனத்தின் மீது விபத்திற்கான தவறு இருக்கிறதோ அதை விசாரித்து அந்த வாகனத்தின் மீது  தகுந்த வழக்கை பதிவு செய்ய வேண்டும். ஆதாரம் இல்லாமலும் ஓட்டுநர் ஒப்புதல் இல்லாமலும் ஆன்லைனில் அடிக்கடி வழக்கு பதியப்படுகிறது. 


இந்த வழக்கை தகுந்த ஆதாரங்களோடு பொய் வழக்கு என்று நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் பாராபட்சம் இன்றி பணி நீக்கம் செய்ய ஆவண பிறப்பிக்க வேண்டும்.  மோட்டார் தொழிலுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பைக் டேக்ஸி முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies