தருமபுரி வந்த ஆஷா மால்வியாவுக்கு ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பாராட்டு பெண்கள் பாதுகாப்பு வலியுறுத்தி, விழிப்புணர்வு சை்ககிள் பயணம் மேற்கொண்டு வரும் ஆஷா மால்வியா செவ்வாய்க்கிழமை தருமபுரி வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
மத்திய பிரதேஷம், ராஜ்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷா மால்வியா. மலையேற்றத்தில் தேசிய அளவில் சாதனை புரிந்த வீரங்கனையான இவர், பெண்களின் பாதுப்பு வலியுறுத்தி, கடந்த ஆண்டு நவ.1-ஆம் தேதி தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக அண்மையில் தமிழகம் வந்த இவர், ஜன.10-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தந்தார்.
இவரது சேவை, சாதனைை பாராட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

.gif)

