Type Here to Get Search Results !

அரூர் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் அசோலா வளர்ப்பு செயல் விளக்கம்.


அரூர் 04 வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தில் அசோலா வளர்ப்பு செயல் விளக்கம் வேளாண்மை இணை இயக்குனர் தர்மபுரி திருமதி விஜயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் விவசாயிகளிடம் கூறும் பொழுது விவசாயிகள் அனைவரும் அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்களை தெரிந்து அசோலா வளர்ப்பு செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தினால் திவன செலவு குறைவதுடன் கால்நடைகள் மூலம் அதிக வருமானம் பெறலாம் என்று கூறினார்கள் இந்நிகழ்ச்சியில் அரூர் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு அசோலா வளர்ப்பு பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்.
அசோலா தீவனமாக கால்நடைகளுக்கு பயன்படுத்தும் பொழுது அசோலா தீவனத்தில் புரத சத்து அதிகமாக உள்ளதால் கால்நடைகள் சத்துக் குறைபாடுகள் இல்லாமல் நன்கு வளர்வதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.


மேலும் இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் அரூர் திரு குமார் மற்றும் அரூர் வட்டார உழவர் ஆலோசனை குழு தலைவர் திரு சுப்பிரமணி மற்றும் வட்டார உழவர் ஆலோசனை குழு உறுப்பினர் திரு முருகன் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ,உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் 20க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies