தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, தலசீமியா குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு அவசர ரத்த தேவை இருந்ததால், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என ஐம்பது நபர்கள் ரத்த தானம் அளித்தனர்.

இதற்காக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் இணைந்து முகாமை ஒருங்கிணைந்தனர். இந்த நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் DR.திரு.கோவிந்த், கல்லூரி முதல்வர் Dr. சா. எழிலன், துணை முதல்வர் Dr. சி. தமிழரசு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. இரா. சதீஸ் குமார், திரு.பா.பெருமாள், இளைஞர் செஞ்சுலுவை சங்கம் அலுவலர் திரு.கோ.திருவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.gif)

