ஆர்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இ.பி.புகழேந்தி மாநிலக்குழு உறுப்பினர்கள் காசிம்மாள், மாதேஸ், ஆறுமுகம், யூடியூசி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் நிர்வாகிகள் காவேரி, லட்சுமி, பார்வதி ஆகியோர் கண்ட உரையாற்றினர்.
ஆர்பாட்டத்தில் இந்த ஊராட்சியில் 2022 ஆம் ஆண்டு முழுவதும் மக்களின் அடிப்படை வசதிகளைப்பற்றிக் கவலைப்படாமல் பஞ்சாயத்து தலைவருக்கும், துணைத்தலைவருக்கு உள்ள முரண்பாட்டால் எந்த வேலையும் நடைபெறவில்லை. பஞ்சாயத்து முழுவதும் குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை. சாக்கடை பராமரிப்புமில்லை. புதிய சாக்கடையும் அமைக்கவில்லை. குப்பைகளையும் அகற்றுவதில்லை. சவுளுப்பட்டியில் சாக்கடைநீர் வெளியேறாமல் கொசுக்கள் அதிகரித்து சுகாதாரக்கேடு ஏறிபடும் அபாயம் உள்ளது.
பாதுகாக்கப்பட்ட குடிநீரான ஒகேனக்கல் குடிநீரையும் விநியோகப்பதுமில்லை. சளுப்பட்டியில் உள்ள மினிடேங்க் மோட்டார் ஸ்விட்ச் பாக்ஸ் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குடிநீர் பைப் உடைந்து பழுதுபார்க்காமல் உள்ளது. சாலைகள் அனைத்து பழுதடைந்து பயணிக்கமுடியாத நிலையில் குளாடும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தையும் முறையாக அமல்படுத்துவதில்லை.
முழுமையாக கூலி கொடுப்பதில்லை என கண்டன ஆர்பாட்டத்தில் முழக்கமிட்டனர். இறுதியில் நிர்வாகி ரவி நன்றி கூறினார். பின்னர் இது சம்மந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

.gif)

