Type Here to Get Search Results !

ராமியணஹள்ளி அருகே அரசு பள்ளி மாணவனை தாக்கிய மூவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் தர்ணா.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த இராமாயணஹள்ளி அரசுப் பள்ளியில் வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் மோகேஷ் வயது 16 என்ற மாணவன்  11ஆம் வகுப்பு  கணித உயிரியல் பாட பிரிவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவனை அழைத்துச் செல்வதற்காக அவரது அண்ணன் கலையமுதன்  வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் சேர்ந்து பள்ளி மாணவிளை நோட்டுமிட வந்திருக்கிறார்களா? என பள்ளி மாணவன் மற்றும் அவரது அண்ணன் ஆகியோரை தாங்கள் காவலர்கள் உங்களை கண்காணித்து வருகிறோம் என காரில் கடத்தி சென்று  அடித்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இந்த தகவலை அவரது உறவினர்கள் அறிந்து ராமியணஹள்ளி பேருந்து நிலையத்தில் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் 100க்கும்  மேற்பட்டோர் ஈடுபட்டார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் மஞ்சுளா பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பேச்சுவார்த்தை சுமுகம் ஏற்படாதால், உடனடியாக சம்பவ இடத்திற்கு அரூர் DSP பெனாசீர் பார்திமா தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது அதன் பின்பு பேச்சு வார்த்தையில்  பள்ளி மாணவர்களை தாக்கியவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிச் சென்றுவர உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளை டிஎஸ்பி ஏற்றதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884