Type Here to Get Search Results !

தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே விபத்தை தடுக்க சாலை சீரமைப்பு.

தருமபுரி மாவட்டத்தில் மிக முக்கியமான பிரதான போக்குவரத்துக்கான சாலையாக சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை கிருஷ்ணகிரி-தொப்பூர் டோல் லிமிடெட் நிறுவனம் பராமரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் மிக முக்கியமானதாகவும், அதிகளவு வளைவுகளை கொண்டதாகவும் உள்ள பகுதியாக சேலம் செல்லும் சாலையில் தொப்பூர் கட்டமேடு முதல் காவலர் குடியிருப்பு வரையிலும், அதேபோல் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் முதல் கட்டமேடு வரை உள்ள சாலை அமைந்துள்ளது. 

இந்த பகுதியில் சிறிதளவு பழுதுகள் கூட ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வந்தன. அதன் தொடர்ச்சியாக தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து கட்டமேடு வரை உள்ள சாலை பகுதியில் பழுது ஏற்படும் நிலையில் உள்ள சாலை பகுதிகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் உடனுக்குடன் முடிக்கப்பட்டு வருகின்றன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies