தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஆகியவை இணைந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பணி நியமன ஆணைகள் மற்றும் சான்றிதழ்களை இன்று (24.03.2022) வழங்கினார்.
இன்றைய தினம் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 2000 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்றனார்.
இதில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து Episource, Hatsun, Cheyyar Sez, Delta Electronics, Amman cars உட்பட 120-க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கு தேர்வு செய்த 806 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விதமாக 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பயிற்சி முடித்தவர்களுக்கு சன்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் துறை அலுவலர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு. இரா. வைத்திநாதன் இஆப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் திருமதி.லதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்வி.தீபா, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர். கிள்ளிவளவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள், வேலை நாடும் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

