தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு வழங்க தேசிய ஆணையரிடம் கோரிக்கை.
தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க வேண்டும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசனிடம், திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் என்.சுரேஷ்குமார் அண்மையில் வழங்கியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள், அரசுப் பள்ளிகளில் 500}க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான கையுறைகள், காலணிகள், முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் சார்பில் நேரடியாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு அனைத்து கல்விக் கட்டணங்களையும் அரசு செலுத்த வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.