Type Here to Get Search Results !

பிட் இந்தியா ரன் ஓட்டம்; மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பாரத பிரதமர் அவர்களின் பிட் இந்தியா ரன் திட்டத்தின்கீழ் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட துணை கண்காணிப்பாளர்DSP .அண்ணாதுரை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

என்சிசி-யை சேர்ந்த  50 மாணவ மாணவிகள் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர் அதிகமான் பள்ளியிலிருந்து பாரதிபுரம் வரை சென்று மீண்டும் அதியமான் பள்ளிக்கு வந்து அடைந்தனர். இதன் நோக்கம் இந்தியாவில் உள்ள பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதேஆகும். இதை தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலர் சி முருகேசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் இதில் அதியமான் பள்ளி தலைமையாசிரியர்  மணிவண்ணன் அதியமான்கோட்டை தலைமையாசிரியர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர் கணேசன் அவர்கள் நன்றி கூறினார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies