Hollywood Movies

Breaking News

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாள் – தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மலர் தூவி மரியாதை!


தருமபுரி, நவம்பர் 24:

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான முரசொலி மாறனின் 23-ஆம் ஆண்டு நினைவு நாள் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஆ. மணி தலைமை தாங்கினார். தொடர்ந்து, முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், நகர துணைச் செயலாளர் வ. முல்லைவேந்தன், தருமபுரி ஒன்றியச் செயலாளர் டி.எல். காவேரி, தருமபுரி கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணியின் மாவட்டத் தலைவர் டி.ஏ. குமார், இளைஞர் அணி நிர்வாகிகள் அசோக் குமார், ஏ. மாதேஸ்வரன், பொன் மகேஸ்வரன், மே. அன்பழகன், வெல்டிங் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!