Type Here to Get Search Results !

தமிழக சுற்றுலா விருதுகள் 2026: தொழில் முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு! 13 பிரிவுகளில் விருதுகள் – செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்க தருமபுரி ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி, ஆக.28:
 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத்துறையின் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளனர்.


13 பிரிவுகளில் சுற்றுலா விருதுகள்

  1. சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் – Best Inbound Tour Operator
  2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் – Best Domestic Tour Operator
  3. சிறந்த பயண பங்குதாரர் – Heritage, Village, Farm & Adventure Tourism
  4. சிறந்த தங்குமிடம் – Best Accommodation
  5. சிறந்த உணவகம் – Best Restaurant
  6. சிறந்த செயல்பாட்டாளர் – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்குமிடங்கள் மற்றும் படகு இல்லங்கள்
  7. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் – Best District
  8. சுத்தமான சுற்றுலா தலம் – Cleanest Tourism Destination
  9. சிறந்த சிறப்பு சுற்றுலா ஏற்பாட்டாளர் – Best Niche Tourism Operator
  10. சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம் – Best Medical & Wellness Tourism Establishment
  11. சிறந்த சாகச சுற்றுலா மற்றும் தங்கும் முகாம் ஏற்பாட்டாளர் – Best Adventure Tourism & Camping Site Operator
  12. சிறந்த சுற்றுலா வழிகாட்டி – Best Tourist Guide
  13. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் – Best Educational Institution for Tourism & Hospitality


சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள், தொழில் முனைவோர், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஊக்குவித்து அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


எனவே, மேற்கண்ட விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 30.09.2026-க்குள் இணையதளத்தின் மூலம் சமர்ப்பித்து பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies