Type Here to Get Search Results !

திமுகவின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு மண்டல ஆய்வுக் கூட்டம் அரூரில் நடைபெற்றது.


திமுகவின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்களுக்கான மண்டல ஆய்வு கூட்டம் அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி முன்னிலை வகித்தார், இந்நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரும் பூந்தமல்லி  சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில்  பணிகளை நாம் எவ்வாறு மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.


இதில் மாநில துணை செயலாளர்கள் எஸ்.புஷ்பராஜ் திப்பம்பட்டி ஆறுசாமி சா.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர், இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட அமைப்பாளர் கே.திருமால் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


இந்நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்குமாவட்ட அமைப்பாளர் எம்.ஸ்டாலின் அரூர் நகர செயலாளர் முல்லைரவி பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேடம்மாள் கோ.சந்திரமோகன் வே.சௌந்தரராசு எஸ்.சரவணன்  இடிடி.செங்கண்ணன்மா. ரத்தினவேல் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொருளாளர் தங்கமணி செயற்குழு உறுப்பினர் கே.சென்னகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கலைவாணி மேற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் கோ.குபேந்திரன் ரா.வேடன் மா.கணேசன், சொ.பாண்டியன் அ.சாமி கு.மதி பா.முனிரத்தினம் க.சரவணன் ப.ராமச்சந்திரன் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தோ.சின்னசாமி ந.பூபால் சி.பிரபு சி.ராஜேந்திரன் கி.வெங்கடாஜலபதி ர.வெங்கடேசன் ஒ.அம்பேத்கர் மேற்கு மாவட்ட ஐடிவிங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் இளைஞரணி துணை அமைப்பாளர் கோட்டிஸ்வரன் விண்ணரசன் நகர நிர்வாகிகள் செல்வதயளன் விண்ணரசன்  மற்றும் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies