Type Here to Get Search Results !

முன்னாள் படைவீரர்கள் ரூ.1 இலட்சம் மானியத்தில் வீட்டு கடன் பெறலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்று புதியதாக வீடு கட்டியிருந்தாலும் அல்லது கட்டிய வீடாக வாங்கினாலும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து வழங்கப்படும் ரூ. 1.00 லட்சம் மானியம் பெற்று பயன்பெறலாம். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்று புதியதாக வீடு கட்டியிருந்தாலும் அல்லது கட்டிய வீடாக வாங்கினாலும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து ரூ.1.00 லட்சம் மானியம் வழங்கப்படும் என்பதால் இந்நதியுதவியினை பெறுவதற்கு கீழ்க்காணும் நிபந்தனைகள் இருக்க வேண்டும்.


  1. இராணுவத்தில் அவில்தார் மற்றும் அதற்கு இணையான தகுதி உள்ளவர்கள் மட்டும்.
  2. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று இருப்பவராக இருக்க வேண்டும்.
  3. கணவர், மனைவி இருவரில் ஒருவர் பெயரில் மட்டும் வீடு இருக்க வேண்டும். கட்டிய மற்றும் வாங்கும் வீடு முதல் வீடாக இருக்க வேண்டும்.
  4. கணவர் மனைவி இருவரும் மத்திய/மாநில பொதுத்துறை அரசு சார் நிறுவனங்களில் நிரந்தர மறு வேலைவாய்ப்பு பெற்றவராக இருத்தல் கூடாது.

எனவே மேற்கூறிய அனைத்து தகுதிகளும் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தருமபுரி அவர்களை அணுகி உரிய விண்ணப்பம் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies