Type Here to Get Search Results !

விலைவாசி உயர்வை கண்டித்து தர்மபுரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், விலைவாசி வியர்வை கண்டித்தும் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர்வை கண்டித்தும், சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர இணை செயலாளர் சுரேஷ், நகர துணை செயலாளர்கள் அறிவாளி,  சுரேஷ், நகர பொருளாளர் பார்த்திபன், மாவட்ட பிரதிநிதிகள் மாதையன், வேல்முருகன், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, மோகன், சங்கர், அசோக்குமார், கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, மதிவாணன், வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி பலராமன் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies