மேலும் இச் செயல் விளக்கத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரமிடுதலின் பயன்களும் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது. பசுந்தாள் உரமிடுதலின் மூலம் காரத்தன்மை உள்ள மண்ணை சீர்திருத்துவதற்கு உதவுகிறது.
வேர் முடிச்சு நூற் புழுக்களை பசுந்தாள் உரம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். களைச் செடிகளின் வளர்ச்சியை குறைக்கலாம். நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தாள் உரத்திற்கு உள்ளது. செயல் விளக்கத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். செயல் விளக்கம் செய்யப்பட்ட விவசாயி திரு. மேகநாதன் என்பவர் தன்னுடைய ஆர்வத்தை செயல்விளக்கத்தின் மூலம் எடுத்துரைத்தார்.
பசுந்தாள் உரமிடுதலின் பயன்களை குறித்து எடுத்துரைத்தார். இதற்கான முன்னேற்பாடுகள் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமதி. தமிழ்ச்செல்வி ஆகிய உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செய்தனர்.

.gif)

