Type Here to Get Search Results !

தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரி்ல் சென்று வர அனுமதி வழங்க வேண்டும்; விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன புகார் மனு.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள கே. அக்ரஹாரம் மேல் தெருவை சேர்ந்த கணேசன் (57) என்ற விவசாயியே தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தனது குடும்பத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்திருந்தவர், 

இது குறித்து விவசாயி கணேசன் கூறும்போது தன்னுடைய  வீட்டிற்கு காலகாலமாக சென்று வந்த வழிப்பாதையை வீட்டருகே உள்ளவர்கள்  நாலாபுறமும் அடைத்தும், தடுப்பு சுவர் கட்டிவிட்டதால் தனது சொந்த வீட்டிற்கே சென்று வர முடியவில்லை, வேறு வழயில்லாமல் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக உறவினர் ஒருவரது வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாகவும், தனது பிரச்சனை தொடர்பாக சம்மந்தபட்ட காவல்துறை, வருவாய்த்துறை  உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கும் விவசாயி கணேசன் தரை வழியில் தான், தனது வீட்டிற்கு சென்று வர முடியவில்லை ஆகாய மார்கமாக வான்வழியாக  ஹெலிகாப்ட்டரிலாவது  சென்று வர தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என புகார் மனு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்


பொம்மை ஹெலிகாப்ட்டரை கையில் பிடித்தபடி விவசாயி தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் புகார் மனு அளிக்க வந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies