Type Here to Get Search Results !

சிகரலஅள்ளி மலைக்கிராமத்தில் விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்கள்- மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சி, சிகரல அள்ளி மலைக்கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சி, சிகரல அள்ளி மலைக்கிராமத்திற்கு மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (07.07.2022) திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தடவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். 

அத்தகைய திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் முழுமையாக நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்களின் மேம்பாட்டிற்காகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயலாற்றி வருகின்றது. விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் மேம்பாட்டிற்காக இருப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும், கல்வியில் முன்னேற்றமடைந்தால் அவர்கள் வாழ்க்கை தரத்திலும், பொருளாதாரத்திலும் மேன்மை அடைய முடியும் என்பதை வலியுறுத்தியும் அரசு எண்ணற்ற பலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. 

அத்தகைய திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பெற்று பயன்படுத்திக்கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும். உங்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கும், சாலை வசதிகளை அமைத்து கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும், இப்பகுதியில் மக்களுக்கு வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். 

அதன் மூலம் உங்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு இலவசமாக அளித்து வருகின்றது. அங்கன்வாடி மையங்களுக்கு செல்லும் குழந்தைகள் முதல் பள்ளியில் பயிலும் குழந்தைகள் வரை சத்தான உணவு, சத்துமாவு, இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அரசு இலவசமாக வழங்கி வருகின்றது. விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். 

உயர்ந்த கல்வியை பெற்றால் தான் உங்கள் குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எனவே அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வையுங்கள். இங்குள்ள படித்த குழந்தைகளும், உயர்க்கல்வி முடித்த குழந்தைகளும் தொடர்ந்து பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டு வந்தால் நிச்சயம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர், அஜ்ஜன அள்ளி, வீரப்பன் கொட்டாய் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் இருளர் இன மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் இ-பட்டா விரைந்து வழங்க பென்னாகரம் வட்டாட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், அஜ்ஜனஅள்ளி, வீரப்பன் கொட்டாய் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தின் வழியே சாலை அமைக்க வனத்துறையின் மூலம் பென்னாகரம் வட்டாட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், வீரப்பன் கொட்டாய் மற்றும் சிகரல அள்ளி இருளர் கொட்டாய் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தூய்மையான, சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (OHT) அமைத்துக்கொடுக்க ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டார்கள். 

மேலும், நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும், தடையின்றி கிடைத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது, பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.அசோக்குமார், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஆறுமுகம், திருமதி.மீனா உட்பட வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884