Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 77,087 மாணவர்கள் காமராஜர் காலை உணவுத் திட்டத்தில் பயன்!


தருமபுரி – செப்டம்பர் 24:

 

தருமபுரி மாவட்டத்தில் 1,352 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77,087 மாணவ, மாணவியர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது: பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து கல்வியில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் வெவ்வேறு வகையான காலை உணவுகள் வழங்கப்படுகின்றன. திங்கட்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார்; செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார்; புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார்; வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்; வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் வழங்கப்படுகிறது.


தருமபுரி மாவட்டத்தில் 817 தொடக்கப்பள்ளிகளில் 28,854 மாணவ, மாணவியர்களும், 310 நடுநிலைப்பள்ளிகளில் 25,236 மாணவ, மாணவியர்களும், 123 உயர்நிலைப்பள்ளிகளில் 9,326 மாணவ, மாணவியர்களும், 102 மேல்நிலைப்பள்ளிகளில் 13,671 மாணவ, மாணவியர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.


இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 1,352 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77,087 மாணவ, மாணவியர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர் என ‘நிறைந்தது மனம்’ நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies