Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் ஹஸ்ரத் யாரப் அவ்லியா அல்லாஹ் உரூஸ் மற்றும் சந்தனக்குட விழா கோலாகலம்.


பென்னாகரம், ஜூலை 17:


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத் யாரப் அவ்லியா அல்லாஹ் தர்காவில், உரூஸ் மற்றும் சந்தனக்குட விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சந்தனக்குடம் ஊர்வலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


விழாவையொட்டி பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி பி.எம். தவுலத்பாஷா தலைமையில் ஆசூரூப் கானாவில் பாத்திஹா நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.


தொடர்ந்து, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சேலம் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி அமான் (நாசர்கான்), தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்கா கமிட்டியினர், ஊர் முக்கிய பிரமுகர்கள், ஹஸ்ரத் யாரப் கமிட்டி கவுரவத் தலைவர் பாபு, தர்கா தலைவர் அபூபக்கர், செயலாளர் ராஜியுள்ளா, ஜாபர் உள்ளிட்டோர் முன்னிலையில் சந்தனக்குடம் ஊர்வலம் தொடங்கியது.


ஆசூரூப் கானாவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், வாத்தியங்கள், வாணவேடிக்கை மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பென்னாகரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆசூரூப் கானாவை வந்தடைந்தது. பின்னர் பாத்திஹா நடைபெற்றதையடுத்து பக்தர்களுக்கு தப்ரூக் மற்றும் சந்தனம் வழங்கப்பட்டது.


விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பென்னாகரம் ஹஸ்ரத் யாரப் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர். ஊர்வலம் மற்றும் விழா நிகழ்ச்சிகளையொட்டி பென்னாகரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies