Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்கள்; ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெறவுள்ளது. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஜூலை 17:


சமூக நீதித்துறை அரசு கூடுதல் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் சிறப்பு முகாம்கள் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 16 வரை பல்வேறு வட்டங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


இந்த முகாம்களில் பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய அடையாள அட்டை வழங்குதல், புதிரைவண்ணார் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.


முகாம்கள் 18.07.2026, 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய தேதிகளில் முறையே தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் வட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் நடைபெறுகின்றன.


பயனாளிகள் தேவையான ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட பிற சேவைகளுக்கும் தொடர்புடைய ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர், நரிக்குறவர், புதிரைவண்ணார் மற்றும் தகுதியுடைய பிற பயனாளிகள் தங்களது வட்டங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies