Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி தொடங்கி வைத்தார்.


பாப்பாரப்பட்டி, பிப். 05:


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பா.ம.க., பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.


பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ்,

  1. பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் – ரூ.5.50 லட்சம்
  2. சுண்ணாம்புக்கார தெருவில் சிமெண்ட் சாலை – ரூ.4 லட்சம்
  3. ராஜுவ் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் – ரூ.5.50 லட்சம்
  4. வேலம்பட்டி கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடம் – ரூ.9 லட்சம்
  5. பி.அக்ரஹாரம் பகுதியில் சிமெண்ட் சாலை – ரூ.14 லட்சம்


உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து, பென்னாகரம் பேருந்து நிலைய நுழைவாயில் மற்றும் பாப்பாரப்பட்டி மாதேஅள்ளி அருகே நடைபெற்று வரும் தாணியக்கல் உள்ளிட்ட பணிகள் ஆகியவற்றையும் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராசா, உலகநாதன், முருகன், பாலு, ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies