Type Here to Get Search Results !

தருமபுரியில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய குடும்ப தலைவி.


தருமபுரி | பிப்ரவரி 09:


மை தருமபுரி அமைப்பு சார்பில், அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அவசர தேவையாக தட்டணுக்கள் தானம் மற்றும் இரத்த தானம் தமிழக முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.


புற்றுநோய் சிகிச்சை காரணமாக குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகம் ஏற்படும் நிலையில், அவர்களுக்கு தலைமுடி தயாரிக்க உதவும் வகையில் கூந்தல் தானம் குறித்த விழிப்புணர்வை மை தருமபுரி அமைப்பு தருமபுரி மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, தருமபுரி செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் முனிராஜ் அவர்களின் மனைவி பிரியங்கா, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கினார்.


இந்த மனிதநேயப் பணிக்கு, பிரியங்கா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. கூந்தல் தானத்தை, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா பெற்றுக் கொண்டார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies