Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே விவசாயியின் ஆட்டுப்பட்டியில் 12 அடி மலைப்பாம்பு; விவசாயி அதிர்ச்சி.


பாலக்கோடு, செப்டம்பர் 11 (ஆவணி 26):

பாலக்கோடு அருகே உள்ள கொத்தலம் கிராமத்தில் விவசாயியின் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது.


அண்ணாமலைஹள்ளி காப்புகாட்டிற்கு அருகே உள்ள கொத்தலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி (55) ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு, அவரது வீட்டு பக்கத்தில் வந்த மலைப்பாம்பு ஒரு கோழியை விழுங்கி கக்கிய பின்னர், ஆட்டுப்பட்டிக்கு அருகே நகர்ந்தது.


சுமார் 12 அடி நீளமுள்ள பாம்பை கண்ட விவசாயி அதிர்ச்சியடைந்து உடனே பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த காட்டு பகுதியில் விடுவித்தனர்.


தொடர்ந்து இப்பகுதியில் மலைப்பாம்புகள் இரை தேடி கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலும் தோன்றி வருவதால், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies