பென்னாகரம் – ஆக. 26 (ஆவணி 10)
தேமுதிக தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் நடைபெற்றன.
பெத்தம்பட்டி சர்ச் ஆசிரமத்தில் 50 பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பென்னாகரம் அருகே பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில வர்த்தக அணி துணை செயலாளர் டி. கே. குமார் தலைமையேற்று, ஒன்றிய செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் முனியப்பன், பவுனேசன், மணி, பரமசிவம், அஜய், முனியப்பன், அழகேசன், முருகேசன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.