இம்முகாம்களில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனை, பல ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து இருதய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து வகை சிறப்பு மருத்துவர்கள் செவிலியர்கள் மேலும் பலர் சிகிச்சையளிக்க உள்ளனர். பொதுமக்கள் வருகை தந்து உரிய மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக்கொள்கிறேன்.


இம்முகாம்களில் இருதய நோய் ECG, ECHO பரிசோதனை, பொதுநல மருத்துவம், பெண்கள்,குழந்தைகள் மருத்துவம், நுரையீரல், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, பல், தோல், புற்று நோய் பரிசோதனை, சித்த மருத்துவம், மன நல மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு மருத்துவர்களும் பங்கேற்று சிறப்பு மருத்துவ சிகிச்சையளிக்க உள்ளனர். தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக