தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் ஊராட்சிக்குட்பட்ட பூனையானூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள வீதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களை ஊராட்சி நிர்வாகம் பிடிக்காததாலும்,அதற்கு குடும்ப கட்டுபாடுகள் செய்யாததால் நாய்கள் இனபெருக்கம் செய்து தற்போது 100 க்கும்மேற்பட்ட நாய்கள் அதிகரித்துள்ளது.
தெருக்களில் சுற்றும் தெருநாய்கள் அப்பகுதியில் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் விளையாடும் குழந்தைகளை அடிக்கடி துரத்தி கடிக்கின்றன. இக்கிராமத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், இது குறித்து பொதுமக்கள் மோளையானூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நாய்களை கட்டுபடுத்த இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த சென்ற ஜோதி, சுகந்தி, சின்னகண்ணு உள்ளிட்ட 8 பேரை அங்கிருந்த வெறிநாய்கள் கடித்ததால், பாப்பிரெட்டிப்படி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த வாரத்தில் மட்டும் 12 பேரை நாய்கள் கடித்துள்ளதால், தெருக்களில் பெண்கள் தண்ணீர் பிடிக்கவும், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் முதியவர்கள் என யாரும் தெருக்களில் நடந்து செல்லவே அச்சப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனர். எனவே ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக தெருக்களில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக