தன் பாலின காதல்; கண்டித்த பெற்றோர்; கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 நவம்பர், 2022

தன் பாலின காதல்; கண்டித்த பெற்றோர்; கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்.

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படிக்கும், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர் திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஏரியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மயமான இளம்பெண் கோவையில் ஒருவருடன் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனடியாக போலீசார் கோவை போலீசார், அங்கு இளம்பெண் மற்றொரு 22 வயது இளம்பெண் இருப்பதை அறிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவருக்குள்ளும் தன்பாலின ஈர்ப்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு, தோழிகள் இருவரும் கோவையில் வந்தனர், கடந்த 10 நாட்களாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தங்களால் பிரிந்து வாழ்வதை பற்றி யோசித்து கூட பார்க்க முடியாது என்றும் போலீசாரிடத்தில் கல்லூரி மாணவிகள் கூறியுள்ளனர்.


இளம்பெண்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தன் பாலின ஈர்ப்பு கொண்டிருப்பதை அறிந்த போலீசார் இருவரிடமும் சாதுர்யமாக பேசி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், அவர்களுக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது, இளம்பெண்களில் ஒருவர் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு, உள்ளே சென்று பிளேடால் மணிக்கட்டு மற்றும் கழுத்தை அறுத்து கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அங்கு போலீசார் ஓடினர். உள்ளே, இளம்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இளம்பெண்கள் இருவரையும் அவர்களின் பெற்றோரிடத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad