இம்மன்றத்தின் வாயிலாக எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ சமுதாயம் பயன்பெறும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. இதன் முதல் நிகழ்வாக எதிர் வரும் 1,2,3. பிப்ரவரி 2023 ஆகிய தேதிகளில் 'விங்க்ஸ்' என்ற கருத்துருவில் பல்வேறு போட்டிகளும் தொடர் சொற்பொழிவு நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளன.

அதற்கான விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு துண்டு பிரசுரத்தை துறை தலைவர் முனைவர் நந்தகுமார் வெளியிட ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) பெற்றுக் கொண்டார். முன்னதாக இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் மண்டத்தின் தலைவர் செல்வி பூரணி வரவேற்றார். இறுதியாக மன்றத்தின் பொருளாளர் செல்வி நிவேதிதா நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புவி அமைப்பியல் துறை பேராசிரியர்கள் முனைவர் வித்யாசாகர் முனைவர் சஞ்சய் காந்தி, திரு அருண் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக