காரிமங்கலத்தில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 நவம்பர், 2022

காரிமங்கலத்தில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 272 வாக்குசாவடிகளுக்கும்  திமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.பழனியப்பன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்க்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், துணை செயலாளர்கள் வழக்கறிஞர் மணி, ராஜேஸ்வரி, பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாபு (எ) முத்துஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி.ஆர். மனோகரன், குட்டி (எ) மோகன், அரசு வழக்கறிஞர் பி.கே.முருகன், பேரூராட்சி தலைவர்கள் பி.கே.முரளி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்களை பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கல், திருத்தல், முகவரி மாற்றம், உள்ளிட்ட பணிகளை வரும் 12, 13, 26 மற்றும் 27 தேதிகளில் மேற்கொள்ள இருப்பதால் இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


மேலும் பூத் கமிட்டி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்டது.


மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்  கிராம , நகர, ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் முழு ஆர்வத்துடனும்,  கவனமுடன் செயலாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் பழனியப்பன் வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அடிலம் அன்பழகன், கிருஷ்ணன், முனியப்பன், வழக்கறிஞர் கோபால், அன்பழகன், பேரூர் கழக செயலாளர் சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி மற்றும் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad