பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு சுவர் விளம்பரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
முனைவர் கோ.வெங்கடாசலம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்வாழாவிற்கு முனைவர் J.பாக்கியமணி, முதல்வர் (மு.கூ.பொ) அவர்கள் தலைமையேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டச்சியர் ஜெகதீசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலத்துகொண்டு, தேர்தல் காலங்களில் நேர்மையான முறையில் நமது ஜனநாயகக் கடமைகளை ஆற்ற வேண்டுமென மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விழாவின் இறுதியில் முனைவர் க.சீனிவாசன் நன்றியுறை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக