தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ஞானசிவம் மற்றும் அகில இந்திய சிமெண்ட் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான சிவக்குமார் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக தற்போது நலவாரியத்தில் வழங்கப்பட உள்ள ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைத்து சலுகைகளும் முறையாக பெற்று தரவும், கட்டிட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் மீதமுள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மத்திய மாநில அரசு தர வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கண்ணன், ஆறுமுகம், சத்தியவேணி, சுமதி ,துளசி, சங்கீதா ,பாலமுருகன் குமரேசன் சங்க துணை தலைவர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக