தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் மேற்கு ஒன்றிய தலைவர் புஷ்பராஜ் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை தலைவர். செல்லப்பாண்டியன் மற்றும் முன்னாள் மாவட்ட பொருளாளரும் முன்னாள் ராணுவ வீரருமான குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு பொம்மிடி ரயில் நிலையம் அருகே பால் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகள் மற்றும் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக