தருமபுரி மாவட்டம் எருமியாம்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் அருந்ததி காலணியைச் மக்களுக்கு முறையான மயான வசதி இல்லாததால் ஆற்றைக் கடந்து சடலத்தை எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எருமியாம்பட்டி அருந்ததியர் காலனியில் சுமார் 100 வீடுகள் உள்ளன இங்கு வசிக்கும் மக்களுக்கு முறையான பாதை வசதி இல்லை மயானத்திற்கு செல்வதற்கு கூட பாதை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு பொதுவான வசதி இல்லாததால் ஆற்றுப்பகுதியில் தண்ணீரில் கடந்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இப்பகுதி மக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடமும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை தங்களுக்கு முறையான பாதை வசதி செய்து தரப்படவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக