
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள ஸ்ரீ ஞான பிள்ளையார் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைப்பெற்றது. சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் பக்தர்களுக்கு கிரகங்களினால் ஏற்படும் ஏழரை சனி, சனி தோஷம், இன்னும் பிற தோஷம் நீங்கி சங்கடம் அகலும் என்பது ஐதீகம், எனவே பக்தர்கள் சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள வினை தீர்க்கும் அருள் மிகு ஸ்ரீ ஞான பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக